வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (08:04 IST)

அதானியின் பாஸ்போர்ட்டை பறிக்கப்படுகிறதா? பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு..!

adani
அதானி பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவடைந்ததை அடுத்து அவர் நிதி சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அதானி நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானி இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அவரது மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் என்பவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் அவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva