புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 21 மே 2020 (22:49 IST)

நடிகர் ராணாவுக்கு நிச்சயம்...காதலி இவர்தான் ! வைரலாகும் போட்டொ

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகார் ராணா சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுக செய்தார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகிறது. இன்று நிச்சயம் நடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிறது. மேலும் இவர்களின் திருமணம் வரும் டிசம்பரில் நடக்கலாம் என கூறப்படுகிறது.

இன்று தனக்கு நிச்சயம் நடந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இந்தத் தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ராணா. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.