வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (21:05 IST)

நாடு முழுவதும் சலூன் கடைகளை ஆரம்பிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!

saloon
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் சலூன் கடைகளை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. 
 
சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் சலூன் கடை வைத்திருக்கும் நிறுவனம் நேச்சுரல்ஸ். இந்நிறுவனம் தற்போது 650 இடங்களில் செயல்பட்டு வருகிறது என்பதும் இந்நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
 
ஆனால் நேச்சுரல்ஸ் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவித்த போது தற்போது பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டங்களில் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது 
நாட்டின் மிகப் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் நிறுவனம் சலூன் மற்றும் ஸ்பாவில் களத்தில் இறங்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva