வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (09:10 IST)

ரெம்டெவிசிர் மருந்து கொடுங்க: மருத்துவரின் காலில் விழுந்த நோயாளியின் உறவினர்

ரெம்டெவிசிர் மருந்து கொடுங்க: மருத்துவரின் காலில் விழுந்த நோயாளியின் உறவினர்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினருக்கு ரெம்டெவிசிர் மருந்து கொடுங்கள் என நோயாளியின் உறவினர் ஒருவர் மருத்துவரின் காலில் விழுந்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் அதிகமாக பரவ மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இங்கு உள்ள மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரெம்டெவிசிர் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். இதனை அடுத்து அந்த மருந்தை வாங்க உறவினர்கள் தேடி அலைந்தும் எந்த மருந்து கடைகளிலும் கிடைக்கவில்லை 
 
இதனை அடுத்து அரசு தலைமை மருத்துவர் ஒருவரின் காலில் விழுந்த நோயாளியின் உறவினர் பெண் ஒருவர் தனது உறவினருக்கு ரெம்டெவிசிர் மருந்து கொடுங்கள் என கெஞ்சிக் கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ரெம்டெவிசிர் மருந்து பற்றாக்குறை இல்லை என்றாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த மருந்து மிகப்பெரிய பற்றாக்குறை இருப்பது தெரிய வருகிறது