செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (14:49 IST)

ரூ.200 நோட்டு அறிமுகம் ; ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்

ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.


 

 
கடந்த ஆண்டு பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்பு மக்களிடம் இருந்த பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டு, அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் கொடுக்கப்பட்டன.
 
மேலும், அப்போதைய பணத் தட்டுப்பாட்டை தவிர்க்க, அவசர அவசரமாக ரூ.7.4 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. மக்கள் மத்தியில்  தற்போது 15.22 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பணப்புழக்கம்  இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
மேலும், புதிதாக அச்சடிக்கப்பட்டு வரும் 200 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த உள்ளன. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக 500 ரூபாய் நோட்டுகளும் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.
 
எனவே, தற்காலிகமாக 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது.