செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (12:14 IST)

சினிமா வாய்ப்பு தேடி வந்த இளம்பெண் - சீரழித்த தயாரிப்பாளர்

தன்னிடம் சினிமா வாய்ப்பு தேடி வந்த ஒரு இளம்பெண்ணை, பிரபல தயாரிப்பாளர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னை எக்ஸ்பிரஸ் உடப பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் கரீம் மொரானி. இவர் மீது சமீபத்தில் ஒரு இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
சினிமா வாய்ப்பு கேட்டு அவரிடம் சென்ற போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரை மொரானி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறியிருந்தார்.


 

 
இதனையடுத்து, மொரானி மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். எனவே, எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில், ஹைதராபாத் நீதிமன்றத்தில் மொரானி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்தது. எனவே, உச்ச நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார். அங்கு அவரின் மது தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இதையடுத்து, அவர் ஹயாத்நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.