வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 15 அக்டோபர் 2022 (10:00 IST)

“சூர்யகுமார் யாதவ் இல்லை… உலகக் கோப்பையில் இவர்தான் ஜொலிக்க போகிறார்…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் அபாரமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் டி 20 சர்வதேச போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார். சிறப்பான ஆட்டத்தால் தற்போது டி 20 தரவரிசையில் அவர் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சூர்யகுமார் யாதவ்வை விட கே எல் ராகுல்தான் அதிக ரன்களை சேர்ப்பார் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் “கே எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரர் என்பதால் அவரால் அதிக பந்துகள் விளையாட முடியும். ராகுல் நிலைத்து நின்று பின்பு அதிரடியாக ஆடுகிறார் என்பதால் அவர்தான் உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் சேர்ப்பார். அதுபோல பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங் அதிக விக்கெட் வீழ்த்துவார்” எனக் கூறியுள்ளார்.