1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:58 IST)

அடங்காத அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு !!

வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில மாநிலங்களவையில் நேற்று அமலியில் ஈடுபட்ட 8 எம்பிக்களை மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை சஸ்பெண்ட் செய்தார். 
 
இதனை அடுத்து அந்த எட்டு எம்பிக்களும் மாநிலங்களவையில் இன்று அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களுக்கு ஆதரவாக எதிர்க் கட்சி எம்பிகளும் குரல் கொடுத்ததால் உறுப்பினர்களிடையே தொடர் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.