புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (10:10 IST)

புத்தகத்தை கிழித்து அமளி செய்த எம்பிக்கள்! – சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை!

மாநிலங்களவையில் விவசாய மசோதாவிற்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால்  மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்கள் நேற்று ஒப்புதலுக்காக மாநிலங்களவை கொண்டு வரப்பட்டது. விவசாய மசோதாக்களால் விவசாயிகளுக்கு பலனில்லை என்றும், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளாமல் மசோதா நிறைவேற்றப்பட்டதால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதுடன், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு எழுந்த நிலையில், அமளியில் ஈடுபட்ட திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.