திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (14:11 IST)

லேண்டரை காட்டும் வரை லேண்ட் ஆக மாட்டேன்: வைரலான ரஜினிகாந்த்!

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரையில் இறங்கமாட்டேன் என உத்திரபிரதேசத்தில் பாலத்தின் மீது பிராத்தனை செய்து வருகிறார் ஒருவர். 
 
நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவிற்கு 2.1 கிமி தூரத்தில் இருக்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. ஆனால், விக்ரம் லேண்டர் சேதமடையாமல் சாய்ந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் இருப்பதாக ஆர்ப்பிட்டர் மூலம் தகவல் பெறப்பட்டது. 
 
அன்று முதல் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும் எதுவும் பயனளிப்பதாக தெரியவில்லை. எனவே, விக்ரம் லேண்டர் தனது இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிகிறது. 
ஆனால், உத்திரபிரதேசத்தில் யமுனை ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பெரிய பாலத்தின் ராட்சத தூணில் தேசியக்கொடியோடு ஏறிக்கொண்டு ஒருவர் பிராத்தனை நடத்தி வருகிறார். இவரது நோக்கமென்னவென ஒரு பேப்பரில் எழுதி தூக்கி எறிந்துள்ளார். 
 
அதில், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் வரை கீழே இறங்கமாட்டேன். இங்கேயே இருந்து சந்திர கடவுளை பிரார்த்தனை செய்வேன். எனது பெயர் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தார்.