செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (10:48 IST)

கண்ணீருடன் ஸ்டேசனுக்கு நிர்வாணமாக வந்த பெண்: வீடியோ எடுத்த கொடூரர்கள்!

மாமியார் கொடுமையை புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு நிர்வாணமாக வந்த பெண்ணை பலர் வீடியோ எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜஸ்தானில் உள்ள சூரு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கண்ணீருடன் நிர்வாணமாக கவால் நிலையம் வந்து புகார் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் சாலையில் நடந்து வந்த வழியில் யாரும் அவருக்கு உதவாமல் வீடியோ எடுத்தது கடும் துயரை ஏற்படுத்தியுள்ளது. 
 
காவல் நிலையம் வந்த பெண் தனது புகாரில் பின்வருமாறு தெரிவித்திருந்தார். எனது கணவர் அஸ்ஸாம் மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார். எனது மாமியார், கொழுந்தியாள் மற்றும் கொழுந்தனார்கள் அனைவரும் சேர்ந்து என்னை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். 
எனது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பித்து இங்கு ஓடிவந்துள்ளேன் என அந்த புகாரில் கூறியுள்ளார். இந்த துயர சம்பவத்தை கேட்டு அதிர்ந்த போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து மாமியார், கொழுந்தியாள் மற்றும் கொழுந்தனார்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்கியுள்ளதகா தெரிவிக்கப்பட்டுள்ளது.