பலாத்கார வழக்கில் பாதி போலியானதுதான்! – டிஜிபியின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பல போலியாக பதிவு செய்யப்படுவதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மற்றும் காவல்துறையின் உடனடி நடவடிக்கைகள் இருந்து வந்தாலும் பல மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே உள்ளது.
சில காலம் முன்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் அதிகமான பாலியல் குற்றங்கள் நடந்த மாநிலங்களில் ராஜஸ்தான் முதல் இடத்தில் இருந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ராஜஸ்தான் டிஜிபி உமேஷ் மிஸ்ரா “மற்ற பல மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து முறையாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுவதில்லை. சில இடங்களில் வெறும் புகாரை மட்டும் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்துகின்றனர்.
ஆனால் ராஜஸ்தானில் எந்தவொரு குற்ற செயல் குறித்த புகாரும் முறையாக எப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்யப்படுகிறது. இதனால் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழல் உருவாகாமல் செய்துள்ளோம். ஆனால் அதே சமயம் பலர் போலியான பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
தேசிய அளவில் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகள் 30 சதவீதம். ஆனால் அது ராஜஸ்தானை பொறுத்தவரை 12% என்ற அளவிலேயே உள்ளது. அதுபோல முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது பொய் வழக்கு தொடுப்பவர்கள் விதிகம் 68% அதிகரித்துள்ளது. பொய் வழக்கு தொடுப்பவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிகை எடுக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K