1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2016 (17:02 IST)

’பாகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்த முடியுமா’ - சல்மான் கானுக்கு ராஜ் தாக்கரே சவால்

சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தானில் படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம் என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு தலைவர் ராஜ் தாக்கரே சவால் விடுத்துள்ளார்.
 

 
உரி தாக்குதலை அடுத்து ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பு, மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வந்த பாகிஸ்தான் கலைஞர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறி 48 மணிநேரம் கெடுவும் விதித்தது.
 
இதையடுத்து பாகிஸ்தான் கலைஞர்களும் அவர்களின் நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்திருந்தார்.
 
வேறு சில திரைக்கலைஞர்களும் இயக்குநர்களும் கூட கலைஞர்களை தீவிரவாதிகளாக பார்க்கக்கூடாது என்று கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ”சல்மான் கானுக்கு பாகிஸ்தான் நடிகர்கள் மீது அவ்வளவு பாசம் இருந்தால் பாகிஸ்தான் அரசிடம் பெர்மிட் வாங்கி அங்கு அவரது படப்பிடிப்பை நடத்தட்டும் பார்க்கலாம். இது அவருக்கு நாங்கள் விடும் சவால்” என்று தெரிவித்துள்ளார்.