திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 30 நவம்பர் 2020 (13:30 IST)

ரயில் நிலையங்களில் இனி மண்குவளையில் தேநீர்! – பிளாஸ்டிக் கப்பை ஒழிக்க திட்டம்!

இந்தியாவின் ரயில் நிலையங்களில் பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் வழங்கப்படுவதை தவிர்க்க ரயில்வே துறை புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள சிறு மற்றும் பெரு ரயில் நிலையங்கள் அனைத்திலும் பல்வேறு தேநீர் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த தேநீர் நிலையங்களில் பயணிகளுக்கு பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பிளாஸ்டிக் கப்புகளில் தேநீர் அருந்துவதால் பயணிகளின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதுடன், இதனால் ஏற்படும் குப்பைகள் சுற்றுபுறத்தையும் பாதித்து வருகின்றன.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக மண் குவளைகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுபுறம் காக்கப்படுவதுடன், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவியாக அமையும் என்று கூறப்படுகிறது.