புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 பிப்ரவரி 2018 (16:38 IST)

அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயிலாக மாற்றும் பாஜக

அயோத்தி ரயில் நிலையம் விரைவில் ராமர் கோயில் வடிவில் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

 
இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறையில் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களை மாற்றி பணி உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா இன்று அடிக்கல் நாட்டினார்.
 
ரயில் நிலையங்களை மாற்றி அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விழாவில் உரையாற்றிய மனோஜ் சின்ஹா கூறியதாவது:-
 
அயோத்தி ரயில் நிலையம் ராமர் கோயில் வடிவில் மாற்றியமைக்கப்படும். அத்துடன் அயோத்தி ரயில் நிலையத்துக்கு ராமர் பக்தர்கள் வருவதற்கு வசதியாக அனைத்து ரயில் நிலையங்களுடனும் இணைக்கப்படும் என்று கூறினார்.
 
அயோத்தி ராமர் கோயில் கட்ட  முடியாத நிலையில் தற்போது ரெயில் நிலையத்தை ராம்ர் கோயில் வடிவில் மாற்ற திட்டமிட்டுள்ளது.