1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Modi is not a Beeda salesman says Rajendra Balaji

பிரதமர் மோடி என்ன பீடா விற்பவரா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

modi
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியின் அறிவுரையின்பேரில் தான் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக குறிப்பிட்டார். மேலும் தமிழக அரசுக்கு பிரதமர் மோடி நல்ல ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
இதனை கையில் எடுத்து கொண்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும், அதிமுக, பாஜகவின் பிடியில் இருப்பதாகவும் விமர்சனம் செய்தன
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'தமிழக அரசுக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவது தவறு அல்ல. அவர் இந்த நாட்டின் பிரதமர். தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல' என்று கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
அழிவில் 42 இந்திய மொழிகள்: அதிர்ச்சி ரிபோர்ட்...