ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் 140 கோடி! – ரயில்வே ரிப்போர்ட்!
ரயில்வே துறையில் வெளி வருவாய் குறித்து பேசிய அமைச்சர் ப்ளாட்பார்ம் டிக்கெட் வசூல் மட்டும் 140 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2018-2019ல் 370 கோடி ரூபாய் ரயில்வேயில் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரயில்வே நிலையங்களில் உள்ள கடைகளுக்கான வாடகை, விளம்பர பதாதைகள் ஆகியவற்றின் மூலம் 370 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ப்ளாட்பார டிக்கெட் விற்பனை மட்டுமே 140 கோடி என்று தெரிவித்துள்ளார்.