1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 23 மே 2024 (14:04 IST)

பிரச்சாரத்திற்கு டெம்போ வேனில் சென்ற ராகுல்.! புகைப்படங்கள் வைரல்..!

Ragul
அரியானா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, டெம்போ வேனில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7  கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி, இந்த முறை பாஜகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
 
300-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  நடைபெற்று வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
மேலும் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அதற்கு காங்கிரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்தியாவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
 
இந்நிலையில் அரியானா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற ராகுல் காந்தி, டெம்போ வேனில் பயணம் செய்தார். இந்த வேனில் ஐந்துக்கும் மேற்பட்டோர் ராகுலுடன் பயணம் செய்தனர். ராகுலுடன் அவர்கள் உரையாடும் புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. மேலும் மோடியின் டெம்போ நியாயமற்றது என்றும் எங்கள் டெம்போ நியாயமானது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

 
முன்னதாக தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த ராகுல் காந்தி, இனிப்பு கடைக்கு சென்று இனிப்பு வாங்கியதோடு ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.