1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (13:34 IST)

இன்று கேஸ் விலை, நாளை பெட்ரோல், டீசல் விலை: ராகுல்காந்தி டுவிட்!

இன்று கேஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து நாளை பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என காங்கிரஸ் என்று ராகுல்காந்தி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
 
ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி கேஸ் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்ற நிலையில் இன்று வர்த்தக உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை மட்டும் உயர்வு என அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இருப்பினும் மார்ச் 7ஆம் தேதி தேதியுடன் ஐந்து மாநில தேர்தல் முடிவடைவதால் மார்ச் எட்டாம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று கேஸ் விலையை உயர்த்திய மத்திய அரசு இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் டீசல் விலையையும் உயர்த்த போகிறது என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.