சிஸ்டத்தை குடுங்க.. தேர்தல்ல எப்படி ஜெயிச்சாங்கன்னு காட்டுறேன்! – ராகுல்காந்தி சவால்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் கடந்த சில வாரங்களாக அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று வேலையில்லா திண்டாட்டம், உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது.
இந்நிலையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “ஜனநாயக படுகொலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. நூற்றாண்டாக கட்டமைக்கப்பட்ட இந்தியா தகர்க்கப்பட்டு வருகிறது. பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஜெர்மனியில் ஹிட்லர் கூட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். ஏனென்றால் ஜெர்மனியின் அமைப்புகளை அவர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். என்னிடம் ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் கொடுங்கள். தேர்தலில் எப்படி வென்றார்கள் என்பதை நான் காட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.