ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (20:13 IST)

திமுக தனது இயலாமையை மறைக்க பாஜக மீது பழி போடுகிறது: அண்ணாமலை

annamalai
திமுக தனது இயலாமையை மறைப்பதற்காக பாஜக மீது குற்றம் சாட்டி வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\
 
 ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்போம் என தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்து இருந்தது என்றும் ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதனை குறைக்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
 
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மற்றும் ஒருசில மாநில அரசுகள் குறைத்துவிட்ட நிலையில்  தமிழக அரசு மட்டும் குறைக்காமல் உள்ளது என்றும், தன்னுடைய இயலாமையை மறைக்க பாஜக மீது பழியை போடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எப்படி மத்திய அரசை கேள்வி கேட்க முடியும் என்றும் தமிழ்நாடு பாஜக தகவலை கூறியுள்ளார்