திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2023 (18:26 IST)

தகுதிநீக்கம் எதிரொலி: மக்களவை வலைதளத்தில் ராகுல்காந்தி பெயர் நீக்கம்..!

Rahul Gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மக்களவை வலைதளத்தில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ராகுல் காந்தி மீது பாஜக வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ராகுல் காந்தி ஜாமின் பெற்று மேல்முறையோடு செய்துள்ளார்
 
இந்த நிலையில் ராகுல் காந்தியின் பெயர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலாளர் இன்று அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
மக்களவையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது பெயர் மக்களவையின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி என ராகுல் காந்தி பெயர் இருந்த நிலையில் தற்போது அதை நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran