1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 மார்ச் 2023 (12:53 IST)

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் இருக்காதா? அகிலேஷ் யாதவ் தகவல்..!

akilesh
பாஜகவை தோற்கடிக்க கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல மாநில தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறாது என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. இந்த நிலையில் இதுகுறிப்பு செய்தியாளர்களிடம் பேசிய போது மேற்குவங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ஆகியோர் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் 
 
பாஜகவை தோற்கடிப்பதில் காங்கிரஸ் கட்சியை விட பிராந்திய கட்சிகள் தான் தீவிரமான போராடுகின்றன என்றும் அந்த கட்சிகளின் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
அவரது அந்த பேச்சிலிருந்து பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என்றே கூறப்படுகிறது.
 
Edited by Siva