காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியம் இல்லை: ஜெய்ராம் ரமேஷ் திட்டவட்டம்
காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி அமைய சாத்தியமில்லை என ஜெயராம் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜகவை 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக சந்திரசேகர ராவ், நிதீஷ் குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட உள்ளிட்டோர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனர். ஆனால் இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்க்க வேண்டாம் என்பதே பலரது கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி அமைவது சாத்தியம் இல்லை என்றும் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சில கட்சிகள் சீர்குலைக்க முயற்சி செய்து வருவதாகவும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் எதிர்க்கட்சி ஒரு வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran