வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated: வெள்ளி, 17 மார்ச் 2023 (07:55 IST)

மக்களவையில் இருந்து ராகுல் காந்தியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த பாஜக

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சபாநாயகர் இடம் பாஜக உறுப்பினர்கள் கடிதம் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் இங்கிலாந்து சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அங்கு சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களிடம் பாஜக கடிதம் அளித்துள்ளது 
 
இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது, இந்திய சுய அதிகாரம் கொண்ட அமைப்புகள் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளன என லண்டனில் ராகுல் காந்தி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தம்மை மக்களவையில் பேச அனுமதித்தால் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் தர தயார் என ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக எம்பிகள் சபாநாயகர் இடம் கடிதம் கொடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva