1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (08:14 IST)

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியால் பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகம் விற்பனை அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை காப்பாற்றும் தேர்தல் என்று பிரச்சாரம் செய்தார் என்பதும் அவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்தது.

மேலும் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் எல்லாம் பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தை மக்களுக்கு காண்பித்தார் என்பதும் இந்த புத்தகத்தை படித்து அனைவரும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி ஏற்படுத்திய விழிப்புணர்வு தற்போது நன்றாக வேலை செய்வதாகவும் இந்திய அரசியல் சாசனத்தின் பாக்கெட் சைஸ் புத்தகம் உன்னை எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிகமாக விற்பனை ஆகி இருப்பதாகவும் இந்த புத்தகத்தை வெளியிட்ட ஈபிசி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 4000 பிரதிகள் மட்டுமே விற்பனையாகும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை 5000 பிரதிகள் விற்பனை ஆகி இருப்பதாகவும் ராகுல் காந்தி ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாகத்தான் இந்த புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் ஈபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது

Edited by Siva