1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜூன் 2024 (14:05 IST)

வாரணாசியில் மோடியை எளிதில் தோற்கடித்திருக்கலாம்.. மிஸ் செய்துவிட்டோம்: ராகுல் காந்தி

Modi Rahul
வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடி வெற்றி பெற்றிருந்தாலும் கடந்த முறை பெற்ற வாக்குகளை விட அவர் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார் என்று கூறப்படும் நிலையில் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை நாங்கள் போட்டியிட வைத்திருந்தால் எளிதில் அவரை தோற்கடித்திருப்போம் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொது தேர்தல் முடிந்த பின்னர் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி ’வாரணாசி தொகுதிகள் பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் அவர் நரேந்திர மோடியை கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பார் என்றும் நாங்கள் மிஸ் செய்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்
 
 வாரணாசி தொகுதியில் மட்டும் எனது சகோதரி போட்டியிட்டு இருந்தால் பிரதமர் மோடி இரண்டு அல்லது மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார் 
 
அனேகமாக வாரணாசி தொகுதியில் மீண்டும் 2029 ஆம் ஆண்டு பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran