செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (14:28 IST)

ரேபரேலியா - வயநாடா.? எந்த தொகுதி.? ராகுல் காந்தி சொன்ன பதில்..!

Ragul Gandhi
மோடி கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா என்றும் அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்கும்படியே மோடியின் பரமாத்மா கூறுகிறது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

2-வது முறையாக வெற்றிபெற்றதையடுத்து கேரளாவின் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி எம்.பி. பேரணி மேற்கொண்டார். பின்னர் மலபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என்பதை முடிவு எடுப்பதில் தர்மசங்கடமான சூழல் உள்ளது என்றார்.
 
துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல. நான் சாதாரண மனிதன் என தெரிவித்த ராகுல், தேர்தலின்போது முதலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறிய மோடி, பின்னர் அந்த முழக்கத்தை கைவிட்டதாக விமர்சித்தார்.
 
என்னை இந்த பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக மோடி கூறினார் என்றும் மோடி கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா என்றும் ராகுல் தெரிவித்தார். அனைத்து முடிவுகளையும் அதானிக்கும் அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்கும்படியே மோடியின் பரமாத்மா கூறுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
மும்பை, லக்னோ விமான நிலையங்களை அதானிக்கு கொடுக்கும்படி பரமாத்மா, மோடியிடம் கூறியுள்ளதாகவும், 7 விமான நிலையங்களை அதானிக்கு கொடுத்து விட்டீர்களா, தற்போது மின்நிலையங்களை கொடுக்கும்படி பரமாத்மா கூறியுள்ளாராம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக சாடினார். 


எந்த தொகுதி எம்.பியாக தொடர்வது என எனது கடவுளான வயநாடு மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.