வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (15:16 IST)

நாட்டின் மீதே சர்ஜிக்கல் ஸ்டிரைக்: வெட்கக்கேடு மோடி ஜி

ரபேல் ஊழல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ரபேல் மோசடியில் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் அம்பலப்படுத்தி விட்டார். 
 
மேலும் ரபேல் விமான பேரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
ஏற்கனவே, ரபேல் விவகாரத்தில் ராகுல் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் இதற்கு வலு சேர்க்கும் விதமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.  
 
ராகுல் இது குறித்து கூறியது பின்வருமாறு, ரபேல் டீலை ரகசிய அறையில் அமர்ந்து பிரதமரே நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றியுள்ளார். இப்போது தெரிகிறது அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் எப்படி கைமாறியது என்று. 
 
இந்தியாவுக்குத் துரோகம் செய்து விட்டார் பிரதமர் மோடி. பிரதமரும், அனில் அம்பானியும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புப் படை மீது ரூ.1.30 லட்சம் கோடியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளனர். 
 
நமது படை வீரர்கள் செய்த தியாகத்தையும், சிந்திய ரத்தத்தையும் அவமானப்படுத்தி விட்டீர்கள் மோடி ஜி. வெட்கக்கேடு. இந்தியாவின் ஆன்மாவுக்கு துரோகம் செய்து விட்டீர்கள் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.