வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 ஜூன் 2019 (13:11 IST)

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் முழு அமைச்சரவை கூட்டம் வருகிய ஜுன் 12-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் வரும் ஜூன் 17-ஆம் தேதி  நாடாளுமன்றம் கூட உள்ளது. ஆதலால் பிரதமர் மோடி தலைமையிலான முழு அமைச்சரவை கூட்டம் வரும் ஜுன் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடக்கவிருக்கும் முழு அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்கள் குறித்து அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.