திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (15:18 IST)

இந்தியா நோக்கி புறப்பட்டன ரஃபேல் விமானங்கள்!- விமானப்படையில் சேர்க்கப்படுகிறது!

பிரான்சுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி தயாரான ரஃபேல் விமானங்கள் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை வாங்க 2016ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட ரஃபேல் விமானங்களை பிரான்ஸ் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முறைப்படி பெற்றுக் கொண்டார்.

இந்த விமானங்கள் கடந்த மே மாதமே இந்தியா வர இருந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் ஒப்படைப்பு பணி தாமதமானது. இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கான ரஃபேல் விமானங்கள் ஐந்து பாரிஸிலிருந்து இந்தியா புறப்பட்டுள்ளன. இந்த விமானங்களை இந்திய வீரர்களே இந்தியாவுக்கு இயக்கி கொண்டு வருகின்றனர். ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்படும் இந்த விமானங்கள் 29ம் தேதி இந்திய விமானப்படையில் இணைக்கப்படுகின்றன.

ஆகஸ்டில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் ரஃபேல் விமானங்களின் அணிவகுப்பு இடம்பெறுமா என இப்போதே மக்கள் சிலர் எதிர்பார்க்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.