வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (15:05 IST)

ராகுல் காந்தி உயர்த்தி பிடித்த அரசியலமைப்பு பாக்கெட் புத்தகம்.. விற்பனை படுஜோர்..!

தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி மக்கள் மத்தியில் உயர்த்தி பிடித்த அரசியல் அமைப்பு பாக்கெட் புத்தகம் தற்போது ஜோராக விற்பனை ஆகி வருவதாக தகவல் வெளியானது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவர் பல இடங்களில் அரசியல் அமைப்பு பாக்கெட் புத்தகத்தின் பெயரை கூறி அந்த புத்தகத்தை கையில் வைத்து உயர்த்திப் பிடித்தார். 
 
லக்னோவை சேர்ந்த கிழக்கு புத்தக கம்பெனி வெளியிட்ட சிவப்பு கருப்பு நிறத்தின் அட்டையில் அமைந்த இந்த அரசியலமைப்பு பாக்கெட் புத்தகம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 
 
அவர் கையில் ஏந்தியபடி இந்த புத்தகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய நிலையில் தற்போது இந்த புத்தகம் படு ஜோராக விற்பனை ஆகி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த புத்தகத்தின் பத்தாவது பதிப்பை சமீபத்தில் கிழக்கு புத்தக கம்பெனி வெளியிட்டுள்ள நிலையில் 6 மாதங்களில் 5000 புத்தகங்களுக்கு மேல் விற்பனை ஆகி உள்ளதாகவும் அடுத்த பதிப்புக்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva