திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (18:49 IST)

பி.வி.சிந்து துணை கலெக்டர்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த பி.வி.சிந்துக்கு ஆந்திர அரசு துணை கலெக்டர் பதவியை அளித்துள்ளது.


 

 
ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி.சிந்துக்கு இந்தியா முழுவதும் அனைவராலும் பாராட்டப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகள் மாறி மாறி பரிசுகளை வழங்கினர்.
 
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியா முழுவதும் பி.வி.சிந்து பிரபலமடைந்தார். அதன்பிறகு பெண்கள் அதிக அளவில் பேட்மிண்டன் விளையாட தொடங்கினர். இந்நிலையில் தற்போது ஆந்திர அரசு அவருக்கு குரூப்-1 அரசுப் பணியை வழங்கியது.
 
குரூப் பிரிவில் பல பணிகள் உள்ளது. அவர் துணை கலெக்டர் பதவியை தேர்ந்தெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் சிந்து துணை கலெக்டராக உள்ளார். இந்த தகவலை சிந்துவின் தாயார் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.