வியாழன், 6 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணத்தில் நெகிழ்ச்சி!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சகோதரி திருமணத்தில் நெகிழ்ச்சி!
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தை சக ராணுவ வீரர்கள் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து நடத்திவைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த புல்வாமா தாக்குதலில் சைலேந்திர பிரதாப் சிங் என்பவர் உயிரிழந்தார்
 
இந்த நிலையில் உயிரிழந்த வீரர் சைலேந்திர பிரதாப் சிங்கின் சகோதரி திருமணம் நேற்று நடந்தது 
 
இந்த திருமணத்தில் உயிரிழந்த வீரரின் சகோதர ஸ்தானத்தில் இருந்து சக வீரர்கள் நடத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் பிரதாப் சிங் மறைந்தார் ஆனால் மறக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு டுவிட்டரில் புகைப்படங்களையும் ராணுவ வீரர்கள் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
ராணுவ வீரர்கள் தங்களுடன் பணி புரிந்த வீரர் ஒருவரின் சகோதரி திருமணத்தை நடத்தி வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது