புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (08:49 IST)

நடைபயிற்சி சென்ற யானை மயங்கி விழுந்து பலி! – புதுச்சேரியில் அதிர்ச்சி!

Elephant
புதுச்சேரியில் நடைபயிற்சி சென்ற கோவில் யானை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோவிலில் கோவில் யானையாக 32 வயதான லட்சுமி என்ற யானை இருந்து வருகிறது. தினம்தோறும் லட்சுமி நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்றும் அவ்வாறாக நடைபயிற்சிக்காக அழைத்து செல்லப்பட்ட லட்சுமி யானை காமாட்சி அம்மன் கோவில் வீதியில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தது.

இதனால் மக்களும், யானை பாகனும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடம் விரைந்து யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றதாகவும், ஆனால் லட்சுமி யானை இறந்துவிட்டதாகவும் தெரிய வருகிறது.

நடைபயிற்சிக்கு சென்ற கோவில் யானை திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K