திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (16:03 IST)

இப்படியும் செய்வாரா...? புதுச்சேரி முதல்வர்...?

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நம் பாரத  பிரதமர் நரேந்திர மோடியால் தூய்மை இந்தியா சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் இத்திட்டம் முழு வீச்சுடன் செயல்படுத்தப்படுகிறது. 
 
இன்று காலை நெல்லித்தோப்பு பகுதிக்கு  சென்ற முதல்வர் நாராயண சாமி ’தூய்மை திட்டத்தில்’ எல்லோருக்கும் முன்மாதிரியாக அங்கு இருந்த சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு, அதை தூர்வாரினார். இந்த காணொளி காட்சியானது ஊடகங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.