செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 மார்ச் 2020 (15:13 IST)

சமூக விலகலுக்கு ஒத்துழைப்பு இல்லை: வேதனையுடன் அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர்

உலகமெங்கும் லட்சக்கணக்கானவர்களை தாக்கியும், ஆயிரக்கணக்கானவர்களை பலியாகியுள்ள கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பாற்ற இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி மக்களை தனிமைப்படுத்தி வைப்பது தான். கொரோனா வைரஸுக்கு இன்னும் மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வைத்து தனிமைப்படுத்தினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது
 
இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாகத்தான். இருப்பினும் கொரோனா வைரஸ் குறித்த சீரியஸ் குறித்து மக்கள் இன்னும் சரியாக புரிந்து கொள்ளாமல் சர்வ சாதாரணமாக எந்தவித அவசர வேலையும் இன்றி வெளியே வருகின்றனர்
 
இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் புதுச்சேரி மக்கள் தங்கள் உயிரை பற்றி கவலைப்படவில்லை என்றும் சமூகவிலகலுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார். அது மட்டுமின்றி சமூக விலகலை மக்கள் கடைபிடிக்காததால் புதுச்சேரி பெரிய சூப்பர் மார்க்கெட்டை தற்காலிகமாக மூட அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுவையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் காய்கறிகளை இறக்கி சில்லரை வியாபாரிகளுக்கு மொத்தமாக அவர்கள் தர வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அங்கு காய்கறிகள் வழங்கக்கூடாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பொதுமக்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது