திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:31 IST)

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் தேதி அக்டோபர் 4 என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவரது பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அந்த பதவிக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தும்படி அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ள அம்சங்கள் புதுவைக்கும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு போதுமான எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால் அந்த கூட்டணிக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி உறுதியாகியுள்ளது