திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 ஜனவரி 2018 (15:00 IST)

2 மணி நேரத்தில் 6 கொலைகள்; சைக்கோ கில்லரின் கைவரிசை...

ஹரியானாவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மணி நேரத்தில் 6 பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தில் உள்ள பல்வால் நகரில் இன்று காலை 4 மணி அளவில் வெவ்வேறு இடங்களில் 6 பேர் இரும்புக்கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டு இறந்துகிடந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து, அதிரடியான நடவடிக்கை எடுத்த போலீஸார் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு கொலையாளியை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவனை ஆதர்ஷ் நகரில் கைது செய்துள்ளனர்.
 
போலீஸார் அவனை கைது செய்த போது அந்த நபர் போலீஸாரையும் தாக்க முற்பட்டுள்ளான். பின்னர் நடைபெற்ற விசாரணையில், கொலையாளி முன்னாள் ராணுவ வீரர் என்றும் அவரது பெயர் நரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது. 
 
கைது செய்யப்பட்ட நரேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.