வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (15:50 IST)

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-49: சிவன் பெருமிதம்

பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்ணில் இன்று 3.02க்கு செலுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் திடீரென வானிலை காரணமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் என தகவல் வெளிவந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் 10 நிமிடங்கள் தாமதமாக 3.12க்கு சரியாக ஏவப்பட்டது. 
 
இந்த நிலையில் 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது என அதிகாரபூர்வமாக சற்றுமுன் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
 
கொரோனா காலத்திற்கு பிறகு செயல்படுத்திய திட்டம் வெற்றியை தந்துள்ளது என்றும், பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும்,  இஓஎஸ்-01 நிலைநிறுத்தப்பட்ட நிலையில் மற்ற செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன என்றும் சிவன் தெரிவித்தார்.
 
பிஎஸ்எல்வி சி-49 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டதற்கு  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது