வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2025 (11:02 IST)

வகுப்பறையில் பேராசிரியை - மாணவன் திருமணம்.. வேற லெவல் காரணம்..!

மேற்குவங்க மாநிலத்தில்  உள்ள வகுப்பறையில் மாணவன் மற்றும் பேராசிரியை திருமணம் நடந்த நிலையில், இந்த திருமணம் குறித்து பேராசிரியை கூறிய காரணம்தான் தற்போது ஹைலைட் ஆகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
மேற்கு வங்க மாநிலத்தில், கல்லூரி பேராசிரியை ஒருவர் வகுப்பறையில் முதல் ஆண்டு மாணவனை திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வைரல் ஆகி வரும் வீடியோவில், பேராசிரியை மற்றும் மாணவன் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டுள்ளனர். மேலும், இருவரும் திருமணம் செய்ய சம்மதம் என்று கூறி எழுத்துப்பூர்வமான கையொப்பமிட்ட கடிதமும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
இந்த வீடியோவை அடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கிய நிலையில், பேராசிரியை விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையில், பேராசிரியர் இந்த திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்:
 
 "இது நான் மாணவர்களுக்கு எடுக்கும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி என்றும், பிரெஷர்ஸ் மாணவர்களுக்காக நாங்கள் நடத்திய நாடகம் இது. ஆனால் இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, எனக்கு எதிராக சதித்திட்டப்பட்டு, இந்த வீடியோ வேண்டுமென்று வைரலாக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
 
மேலும், "என் மீது அவதூறு செய்ய முயன்றவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் குழு அமைத்துள்ளதாகவும், அந்தக் குழு விசாரணை செய்யும் என்றும் உண்மையாகவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த டிராமாவா அல்லது உண்மையான திருமணம் என்பது குறித்து விசாரணை செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran