திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (17:54 IST)

கள்ளக்காதலுக்கு இடையூறு! கார் டிரைவரை கொன்று துண்டு துண்டாக வெட்டி, ஆசிட்உற்றி எரித்த மருத்துவர்!

போபால்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கார் டிரைவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து ஆசிட் ஊற்றி எரித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.


 
மத்திய பிரதேச மாநிலம் ஹொசாங்கபாத்தைச் சேர்ந்தவர் சுனில் மந்த்ரி (வயது 56). இவர் அந்த பகுதியில்  பிரபல மூட்டு வலி சிகிச்சை அளிக்கும் மருத்துவராக உள்ளார்.
 
சுனில் மந்த்ரியின் மனைவி வீட்டிலேயே டெய்லர் கடையை நடத்தி வந்தார். அவர் மரணம் அடைந்துவிட்டார். இதனால் ந்த கடையை நடத்தும் பொறுப்பை, தனது கார் டிரைவர் விரேந்திர பச்சோரி (30) என்பவரின் மனைவிக்கு  சுனில் மந்த்ரி. வழங்கினார் 
 
இதன்பிறகு டிரைவர் பச்சோரியின் மனைவியுடன் அதிக பணம் கொடுத்து தினமும் நெருங்கி பழகியுள்ளார்.  ஒரு கட்டத்தில் பச்சோரியின் மனைவியை தன் ஆசை வலையில் வீழ்த்தினார் சுனில் மந்திரி. அதன் பிறகு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். சமீபத்தில் பச்சோரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 
 
இதுதொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மருத்துவர் சுனிலிடம் பச்சோரியின் மனைவி தெரிவித்தார். 
 
இதையடுத்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கார் டிரைவர் பச்சோரியை கொலை செய்ய திட்டமிட்டார் சுனில். சம்பவத்தன்று, பச்சோரி தனக்கு பல்வலி இருப்பதாக கூறவே, அவருக்கு சிகிச்சையளிப்பது போல நாற்காலியில் அமர வைத்து, திடீரென கழுத்தையறுத்து கொன்றுள்ளார் சுனில்.
 
இதன்பிறகு தனது வீட்டுக்குள் பல துண்டுகளாக பச்சோரி உடலை அறுத்துள்ளார். நள்ளிரவு ஒரு மணிவரை உடலை அறுத்துள்ளார். இதனால் களைப்பு அடைந்த மருத்துவர் காலையில் எழுந்து பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்தார். மீண்டும் காலையில் எழுந்து உடலை சிறு சிறு துண்டாக நறுக்கி,  பிறகு, திராவகத்தை வீசி உடலை எரித்துள்ளார். இதனிடையே, டாக்டரின் வீட்டுக்குள் வினோத சத்தங்களும், புகைமூட்டமும் எழுவதை கவனித்த அக்கம் பக்கத்தினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து. திடீரென வீட்டுக்குள் நுழைந்த போலீசார் சுனிலை கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.