வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 17 ஜூலை 2019 (19:56 IST)

பிரியங்கா காந்தியின் வைரலாகும் ‘சாரி போட்டோ’ ..

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்தார். அதனால் அனைத்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் ராஜினாமா செய்து வருகின்றனர். அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து கட்சியில் பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிவருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுலின் தங்கையுமாக பிரியங்கா காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், 22 ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணத்தின் போது அணிந்திருந்த  இளம் சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.
 
நம் இந்தியக் கலாச்சாரத்தில் பிரபதிபலிப்பாக பெண்கள் அணியும் சீலை கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே சாரி டுவிட்டர் என்ற ஹேஸ்டேக் பரவலாகிவருகிறது. இந்த வாரம் முழுவதுமே சாரி அணிந்த போட்டோவை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது திருமண சீலை அணிந்திருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.