1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 ஜூன் 2019 (17:53 IST)

7 பேர் விடுதலை?- ஆளுநரை சந்தித்த முதல்வர்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 7 பேர் விடுதலை குறித்து பேச சந்தித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்துடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை குறித்தும், தலைமைச் செயலாளர்,டிஜிபி நியமனம் குறித்தும் பேச இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்சாவை ஆளுநர் சந்தித்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு  நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.