திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 4 அக்டோபர் 2021 (08:28 IST)

விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி கைது

விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கார் மோதியதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக லக்கிம்பூர் என்ற பகுதியை பிரியங்கா காந்தி புறப்பட்டுச் சென்றாr
 
இந்த நிலையில் பிரியங்கா காந்திஅங்கு செல்லக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தினர்.ஆனால் காவல்துறையினர் அறிவுரையையும் மீறி பிரியங்க காந்தி லக்கீம்பூர் என்ற ஊருக்கு சென்றார் 
 
இதனை அடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பன்விர்பூர் என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்டதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் என்பவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது