செவ்வாய், 3 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (11:28 IST)

ரிலையன்ஸ் ஜியோ வாங்கிய பாலிவுட் நடிகை: வைரலாகும் புகைப்படம்

ரிலையன்ஸ் ஜியோ வாங்கிய பாலிவுட் நடிகை: வைரலாகும் புகைப்படம்
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ரிலையன்ஸ் ஜியோ சிம் பெற விண்ணபித்த விண்ணப்படிவம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ரிலையன்ஸ் ஜியோ, 4G இணைய சேவையை 3 மாதத்திற்கு இலவசமாக வழங்கி அனைவரையும் ஈர்த்துள்ளது.
 
ஜியோ சிம் பெற அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜியோ சிம் பெற விண்ணப்பம் செய்துள்ளார். அவரின் விண்ணப்படிவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஜியோவின் அதிரடி சலுகை நடிகர், நடிகைகளையும் விட்டு வைக்கவில்லை.