ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (11:14 IST)

காதலியுடன் சண்டை; ஹேண்ட் பேக்கில் “சூச்சூ” போன காதலன்!

Love
தென் கொரியாவில் காதலியோடு ஏற்பட்ட சண்டையால் அவரை பழி வாங்க அவரது ஹேண்ட் பேக்கில் காதலன் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் தோறும் காதலர்களுக்குள் ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனையோ சண்டைகள் அடிக்கடி எழுந்த வண்ணம் உள்ளன. சிலர் சண்டையினால் ஏற்படும் ஆத்திரத்தில் செய்யும் சில செயல்கள் பல சமயங்களில் நகைச்சுவையாக முடிந்து விடுவதும் உண்டு.

தென்கொரியாவில் நடந்த இந்த காதல் யுத்தம் கேட்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக உள்ளது. தென் கொரியாவில் ஒரு பெண் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏதோ காரணத்தால் சண்டை எழுந்துள்ளது.

இதனால் காதலியை பழிவாங்க எண்ணிய காதலன் தனது காதலியின் விலை உயர்ந்த ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்துள்ளார். இதுகுறித்து காதலி நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் தான் சிறுநீர் கழிக்கவே இல்லை என காதலன் மறுத்துள்ளார். இதனால் காதலனை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியதில் அது அவர் கழித்த சிறுநீர்தான் என தெரிய வந்துள்ளதாம்.

இதனால் அந்த இளைஞருக்கு நீதிமன்றம் ரூ.91,634 அபராதமாக விதித்து உத்தரவிட்டுள்ளது. காதலர்களின் இந்த மோதல் பலருக்கு சிரிப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.