புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (19:04 IST)

லட்டு மாதிரி செல்போனை விழுங்கிய கைதி மருத்துவமனையில் அனுமதி...

வட மாநிலமான கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற சிறைச்சாலையில் ஒரு கைதிக்கு திடீரென்று வயிற்று வலியால் துடிக்கவே சிறைக்காவலர்கள் அவரை  அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மருத்துவர் போலீஸார் உட்பட அனைவருமே திகைத்து விட்டனர்.
 
முதலில் அதிகாரிகள் சிறையில் சோதனை நடத்திய போது மாட்டிக்கொள்வோமோ என்று பயந்த சிறைக்கைதி தன் கையில் வைத்திருந்த செல்போனை லபக் என்று விழுங்கியுள்ளார். அதனால் தான் அவருக்கு வயிற்றில் வலி எடுத்துள்ளது.
 
கைதி ஒரு விரல் அளவுள்ள செல்போனை விழுங்கியுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
 
அந்த செல்போனை குடல் இயக்கம் வழியாக எடுக்க மருத்துவர்கள் முயற்சி எடுத்து வருவதாகவும். அது முடியாமல் போனால்  கைதிக்கு  அறுவைசிகிச்சை செய்து செல்போனை எடுக்கப்போவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.