ஆயுள் தண்டனை கைதியின் பர்த்டே செலப்ரேஷன்: சிறையில் கேக் வெட்டி கொண்டாட்டம்

inmate
Last Updated: ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (16:43 IST)
பீகார் சிறையில் ஒரு ஆயுள் தண்டனை கைதியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிண்ட்டு திவாரி என்பவர் இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி. இவர் சிதார்மார்ஹி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவர் 30 வயதை எட்டினார். இந்நிலையில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் பின்பு சிறை கைதிகளுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. பிண்ட்டு திவாரி பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சிறை விதிகளை மீறி இவ்வாறு பிறந்த நாள் கொண்டாடப்பட்டதால் 4 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

courtesy ANI


இதில் மேலும் படிக்கவும் :