வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (07:40 IST)

பிரதமர் மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி: முதல் டோஸை போட்டுக்கொண்டார்!

பிரதமர் மோடிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி: முதல் டோஸை போட்டுக்கொண்டார்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருவது தெரிந்ததே.
 
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இந்தியா உட்பட பல நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பல நாடுகளில் பிரதமர் மற்றும் அதிபர்களே முதல் நபராக தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் இன்று பிரதமர் மோடி கொரோனா வைரஸ் முதல் டோஸை போட்டுக்கொண்டார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்றும் மூத்த குடிமக்கள் உள்பட தகுதி உடைய அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டபின் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது